திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அஜீத்... ரசிகர்கள் அன்புப் பரிசை ஏற்றுக் கொண்டார்

|

என்னை அறிந்தால் படம் பிப்ரவரி 5-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், நடிகர் அஜீத் திருப்பதி திருமலையில் சாமி தரிசனம் செய்தார்.

அங்கு குழுமிய தனது ரசிகர்களை நலம் விசாரித்தார். அவர்கள் தந்த அன்புப் பரிசை பெற்றுக் கொண்டதோடு, உடன் நின்று படமும் எடுத்துக் கொண்டார்.

வெள்ளை வேட்டி, சட்டை, தனது பிராண்ட் நரைத்த தாடியுடன் திருமலைக்கு வந்த அஜீத்தை, கோயில் நிர்வாகிகள் வரவேற்று சாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அஜீத்... ரசிகர்கள் அன்புப் பரிசை ஏற்றுக் கொண்டார்

சாமி தரிசனம் முடிந்து வெளியில் வந்த அஜீத்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களுடன் நின்று படங்கள் எடுத்துக் கொண்டார் அஜீத். சிலர் அவருக்கு பரிசாக திருப்பதி ஏழுமலையான் படத்தை அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்டு, ரசிகர்களை நலம் விசாரித்தார் அஜீத்.

பின்னர் அங்கிருந்து சென்னைக்கு கிளம்பினார்.

திருப்பதிக்கு அஜீத் செல்வது இது முதல் முறையல்ல. என்னை அறிந்தால் படத்துக்கு முன், வீரம் படம் முடிந்ததும் திருமலைக்குச் சென்று இயக்குநர் சிவாவுடன் மொட்டை போட்டுக் கொண்டு திரும்பியது நினைவிருக்கலாம்.

 

Post a Comment