மூன்று இளம் நாயகிகளுடன் தான் நடித்துள்ள டூரிங் டாக்கீஸ் படத்தை, இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து ரீமேக் செய்யப் போகிறாராம் எஸ்ஏ சந்திரசேகரன். இந்தப் படத்தை கலைப்புலி தாணுவே தயாரிக்கிறார்.
இன்று நடந்த டூரிங் டாக்கீஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது இதனைத் தெரிவித்தார் கலைப்புலி தாணு.
படத்தின் ட்ரைலரை வெளியிட்ட பிறகு கலைப்புலி தாணு கூறுகையில், "இந்தப் படம் எஸ் ஏ சந்திரசேகரனின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக அமையும். தமிழ் சினிமா வரலாற்றில் இடம்பெறும். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
டூரிங் டாக்கீஸ் படத்தை இந்தியில் அமிதாப்பச்சனை வைத்து இயக்கப் போகிறார் எஸ் ஏ சந்திரசேகரன். அந்தப் படத்தை நானே தயாரிக்கப் போகிறேன்," என்றார்.
டூரிங் டாக்கீஸ் படத்தில் 75 வயதில் இளம் பெண்ணை காதலிப்பவராக நடித்துள்ளாராம் எஸ்ஏ சந்திரசேகரன். அந்த வேடத்தில்தான் அமிதாப்பை நடிக்க வைக்கப் போகிறார்களாம்.
Post a Comment