"கும்கி"க்கு காலண்டர் அடித்த சிவகாசி செல்வம் மேனன் மற்றும் கார்த்திக் மேனன்...!

|

சென்னை: நடிகை லட்சுமிமேனன் போட்டோக்களைக் கொண்டு அவரது ரசிகர்கள் காலண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கும்கி படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கேரளாவைச் சேர்ந்த லட்சுமிமேனன். தொடர்ந்து சுந்தரபாண்டியன், ஜிகிர்தண்டா, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

லட்சுமி மேனனின் பரம ரசிகர்கள் இணைந்து சிவகாசியில் காலண்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். லட்சுமிமேனன் புகைப்படத்துடன் உள்ள அந்த காலண்டரில் லட்சுமி மேனன் ரசிகர் மன்றம் - சிவகாசி என எழுதப்பட்டுள்ளது. கூடவே கும்கி படத்தில் யானைக்கு லட்சுமிமேனன் முத்தமிடுவது போன்ற புகைப்படமும் அதில் உள்ளது.

இது தவிர காலண்டரின் மேல் பகுதி அன்பு, அடக்கம், அழகு என லட்சுமி மேனனின் புகழ் பாடுகிறது.

லட்சுமி மேனன் புகைப்படம் தவிர அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த இருவரது படமும் காலண்டரில் இடம் பெற்றுள்ளது. அதில் ஒருவரது பெயர் செல்வம் மேனன், மற்றொருவர் பெயர் கார்த்திக் மேனன் (செல்வம், கார்த்திக் இவங்க பெயர் போலத் தெரிகிறது... பின்னால் உள்ள மேனன் இவர்களாக சேர்த்துக் கொண்டு விட்டார்கள்)

இதெல்லாம் கூட ஓகே, ஆனால் காலண்டரின் கீழ் பகுதியில் லட்சுமிமேனனின் புகைப்படத்திற்கு கீழே மே 19, 2015 என எழுதப்பட்டுள்ளது. அதாகப்பட்டது, லட்சுமிமேனனின் பிறந்தநாள் மே 19ம் தேதி வருகிறதாம்.

இந்த காலண்டர் புகைப்படம் பேஸ்புக், வாட்ஸ் அப்களில் வேகமாக பரவி வருகிறது.

என்னம்மா யோசிக்கிறாங்கப்பா....!

 

Post a Comment