'வலைப்பூ விமர்சகர்கள் எல்லாம் படமெடுக்க முடியுமா?'

|

ப்ளாக் என்பபடும் வலைப்பூவில் விமர்சனம் எழுதி வந்தவர் கேபிள் சங்கர். இவர் முதல்முறையாக ஒரு முழு நீளப் படம் எடுக்கிறார். தலைப்பு தொட்டால் தொடரும்.

வலைப்பூக்களில் விமர்சனம் செய்து விட்டால் சினிமா இயக்குநராகி விடலாமா? அதையே தகுதி என நினைத்துக் கொண்டு சினிமாவுக்கு வந்து விடமுடியுமா?

இந்தக் கேள்வி, அவர் படம் தொடங்கிய நாளிலிருந்து தொடர்கிறது.

'வலைப்பூ விமர்சகர்கள் எல்லாம் படமெடுக்க முடியுமா?'

அவர் என்ன பதில் சொல்கிறார்?

'நான் சினிமா பற்றி பரவலாக ஒவ்வொரு தளத்திலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு தெரிந்து கொண்டுதான் படம் இயக்க வந்திருக்கிறேன். விமர்சகனாக வெற்றி பெற்று அந்த அடையாளம் பெற்று விட்டதால் இப்படிக் கேள்வி வருகிறது.

நிச்சயம் இது நியாயமான கேள்விதான். நிச்சயமாக விமர்சனம் மட்டும் செய்பவர்கள் படமெடுக்க முடியாதுதான். ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். எல்லா விமர்சகர்களும் அந்த தகுதியை வைத்துக் கொண்டு படமெடுக்க முடியாது. ஆனால் விமர்சகர்கள் இயக்குநர்களாகியும் இருக்கிறார்கள்.

'வலைப்பூ விமர்சகர்கள் எல்லாம் படமெடுக்க முடியுமா?'

நான் வெறும் விமர்சகனல்ல. நான் முன்பே சொன்ன மாதிரி பல துறைகளில் ஈடுபட்டு அனுபவ அறிவைப் பெற்றிருக்கிறேன். தியேட்டர் நடத்தியிருக்கிறேன். விநியோகம் செய்துள்ளேன். பல கதை விவாதங்களில் ஈடுபட்டு இருக்கிறேன். வசன உதவி, திரைக்கதை உதவி என்று பணியற்றிய அனுபவம் உண்டு. உதவி
இயக்குநர், தயாரிப்பு நிர்வாகி என்று பலதரப்பட்ட பணிகளை செய்துள்ளேன். ஏன் போஸ்டர் கூட ஒட்டியுள்ளேன்," என்கிறார்.

காதல் த்ரில்லர் வகைப் படமாக உருவாகியுள்ளதாம் இந்த தொட்டால் தொடரும். படத்தை பலருக்கும் போட்டிக் காட்டினாராம் இயக்குநர். யாரும் குறை சொல்லவில்லை என்பதால் நம்பிக்கையுடன் விரைவில் படத்தை வெளியிடவிருக்கிறார்.

 

Post a Comment