சென்னை: கார்த்தி நடிக்க உள்ள காஷ்மோரா படத்தில் அவருக்கு நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என்று இரண்டு ஜோடிகளாம்.
கார்த்தி, லக்ஷ்மி மேனன் நடித்துள்ள கொம்பன் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை அடுத்து கார்த்தி நடிக்கும் படம் காஷ்மோரா. படத்தை விஜய் சேதுபதியை வைத்து இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.
படத்தில் கார்த்திக்கு இரட்டை வேடமாம். ஒரு கதாபாத்திரத்திற்கு நயன்தாராவும், மற்றொரு கதாபாத்திரத்திற்கு ஸ்ரீதிவ்யாவும் ஜோடியாக நடிக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.
இது குறித்து கோகுல் கூறுகையில்,
படம் இந்த வகையைத் தான் சேர்ந்து என்று கூற முடியாது. படத்தில் கொஞ்சம் ஃபேன்டஸி உள்ளது. ஸ்ரீதிவ்யாவின் கதாபாத்திரம் பற்றி தற்போதைக்கு எதுவும் தெரிவிக்க முடியாது என்றார்.
காஷ்மோரா படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் துவங்குகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
Post a Comment