விஷால் - ஹன்சிகா நடித்துள்ள
‘அரண்மனை' படத்திற்குப் பிறகு சுந்தர்.சி இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரபு, வைபவ், சந்தானம், சதீஷ் உள்பட பலரும் நடித்துள்ளனர். ஆக்ஷன் கலந்த காமெடி படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி காரைக்குடி, கும்பகோணம், பொள்ளாச்சி, ஊட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்தது. பொங்கல் தினத்தன்று படத்தை வெளியிடுவதில் தீவிரமாக உள்ளனர்.
இதையடுத்து தணிக்கைக் குழுவுக்கு படம் நேற்று அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
பொங்கலுக்கு வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்ட படங்களில் யு சான்று பெற்று தயாராக உள்ள ஒரே படம் ஆம்பளதான்.
Post a Comment