ஷமிதாப் படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகள் தீவிரமடைந்துள்ளன. இதுவரை இல்லாத பிரமாண்ட அளவில் படத்தை வெளியிடவிருப்பதால், நாடு முழுவதும் படத்தை விளம்பரப்படுத்த செய்தியாளர் சந்திப்பு, படத்தின் சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன்புதான் மும்பையில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பாராட்டு விழாவாக அது நடத்தப்பட்டது.
இந்த விழாவில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல் ஹாஸன், ஸ்ரீதேவி என இந்திய சினிமாவின் முதல் நிலை பிரபலங்கள் பங்கேற்றனர். இதனால் படத்துக்கு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த நிலையில் தென்னகத்தில் படத்தினை விளம்பரப்படுத்த நாளை செய்தியாளர் சந்திப்பு மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் அமிதாப் பச்சன், இளையராஜா, இயக்குநர் பால்கி, நடிகர் தனுஷ், நடிகை அக்ஷரா, ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் போன்றவர்கள் பங்கேற்கின்றனர். ஓஎம்ஆர் சாலையில் உள்ள சத்யபாமா பல்கலைக் கழகத்தில் மாலையில் இந்த சந்திப்பு நடக்கிறது.
Post a Comment