ராசி இல்லை: தளபதியின் படத் தலைப்பு மாறுகிறது?

|

சென்னை: தளபதி நடிகர் தான் நடித்து வரும் விலங்கின் பெயர் கொண்ட படத்தின் தலைப்பை மாற்றிவிடலாமா என்ற யோசனையில் உள்ளாராம்.

ஆயுதம் படத்தை அடுத்து தளபதி நடிகர் தற்போது விலங்கின் பெயர் கொண்ட அந்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் நடித்து வரும் படத்தின் பெயர் ராசி இல்லை என்றும், அந்த பெயரிலோ அல்லது அந்த பெயரை இணைத்தோ வந்த படங்கள் ஓடவில்லை என்றும் பலர் இணையதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

ராசி இல்லை: தளபதியின் படத் தலைப்பு மாறுகிறது?

இவ்வளவு ஏன் ஸ்டைல் நடிகரின் பாயும் விலங்கு படம் கூட ஓடவில்லை. இந்நிலையில் தளபதியின் படத்திற்கு இந்த பெயர் நிலைத்தால் படம் ஓடாது என்று இணையதளத்தில் சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் தளபதியின் காதுகளுக்கு செல்ல அவரோ படத்தின் தலைப்பை மாற்றிவிடலாமா என்று பலத்த யோசனையில் உள்ளாராம். இந்நிலையில் படத்தின் இயக்குனரோ தனது உதவியாளர்களை அழைத்து நீங்கள் ஒவ்வொருவரும் 100 தலைப்புகள் எழுதி வாருங்கள் என்று தெரிவித்துள்ளாராம்.

படத்தை கூட எளிதில் எடுத்துவிடலாம் போல ஆனால் தலைப்பு வைப்பதற்குள் கண்ணை கட்டுதே என்று தயாரிப்பாளர் புலம்புகிறாராம்.

 

Post a Comment