கவுதமி மகளும் கதாநாயகியாகிறார்?

|

நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமியும் சினிமா கதாநாயகியாகிறார். அவரை ஹீரோயினாக்க சில இயக்குநர்கள் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய தமிழ் சினிமாவில், சினிமா, அரசியல் பின்னணி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம் என்றாகிவிட்டது.

இன்றைக்கு முன்னணியில் உள்ள நடிகர்களில் அஜீத், விஜய் சேதுபதி போல சினிமா பின்னணி இல்லாதவர்கள் மிகக் குறைவு. நடிகைகளிலும் பல வாரிசுகள் வந்துவிட்டார்கள். இயக்குநர்களிலும் வாரிசுகளே அதிகம்.

கவுதமி மகளும் கதாநாயகியாகிறார்?

கமலின் மகள்கள் ஸ்ருதி ஹாஸன், அக்ஷரா ஹாஸன் இருவருமே நடிகைகளாகிவிட்டனர்.

முன்னாள் கதாநாயகி ராதாவின் மகள்கள் கார்த்திகா, துளசி இருவரும் கதாநாயகிகளாகியுள்ளனர்.

இந்த வரிசையில் கவுதமி மகள் சுப்புலட்சுமியும் கதாநாயகியாக நடிக்கப் போகிறாராம். சுப்புலட்சுமிக்கு இப்போது 16 வயது ஆகிறது.

சினிமாவுக்கு தேவையான அளவுக்கு நடனம் கற்றுள்ளாராம். சுப்புலட்சுமியை தங்கள் படங்களில் நடிக்க வைக்க இயக்குநர்கள் சிலர் முயன்று வருகின்றனர்.

சீக்கிரமே அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். வெல்கம்!

 

Post a Comment