சென்னை: அக்ஷரா ஹாஸனுக்கு நான் எந்த டிப்ஸும் வழங்கவில்லை என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
தனுஷ் இந்தியில் நடித்துள்ள இரண்டாவது படம் ஷமிதாப். படம் வரும் 6ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஷமிதாபில் தனுஷ் வாய் பேச முடியாதவராக நடித்துள்ளார். அவருக்கு குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.
இந்த படம் மூலம் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா நடிகையாகியுள்ளார். அக்ஷரா புதுமுகமாச்சே ஏதாவது நடிப்பு டிப்ஸ் கொடுத்தீர்களா என்று தனுஷிடம் கேட்கப்பட்டது.
அதற்கு தனுஷ் கூறுகையில்,
அக்ஷராவுக்கு டிப்ஸ் கொடுக்கும் நிலையில் நான் இல்லை. நான் நடித்த கதாபாத்திரம் சவால் ஆனது. அதனால் நானே அதிகமாக உழைக்க வேண்டி இருந்தது. இது உங்களின் முதல் படமோ, 50வது படமோ அது முக்கியம் இல்லை. இந்த விஷயத்தில் எனக்கும், அக்ஷராவுக்கும் இடையே பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்றார்.
கேமராவுக்கு முன் வந்தால் தனுஷ் வேறு மனிதாரகிவிடுவார். அவர் நடிப்பதை பார்த்தாலே நாம் எல்லாம் அசந்துவிடுவோம் என்று அவரின் நடிப்பை அக்ஷரா புகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment