மூணே மூணு வார்த்தை... இந்தப் பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது. தயாரிப்பவர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்பி சரண்.
மதுமிதா இயக்கும் இந்தப் படத்தின் முதல் ஒற்றைப் பாடலை எஸ் பி பாலசுப்பிரமணியம் வெளியிட்டார்.
பின்னர் ‘மூணே மூணு வார்த்தை' திரைபடத்திலிருந்து ஒரு பாடலை பாட ஆரம்பித்தவர், இசை வெளியீட்டு அரங்கை தன் காந்தகுரலால் கவர்ந்திழுத்தார்.
பின்னர் தனது மகனை வாழ்த்திய எஸ்பிபி, இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் அத்தனை கலைஞர்களின் பெற்றோர்களையும் மேடையேற்றி பெருமைபடுத்தினார்.
'அறிமுக இசையமைப்பாளர் கார்த்திகேய மூர்த்தி அச்சு-அசல் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் போல் உள்ளதை கண்டு மலைத்து போனேன். இந்த இளைஞனும் அவரைப் போல் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்' என்றார் எஸ்பிபி.
"ரசிகர்கள் முன்னிலையில் பாடலை வெளியிட்டது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அவர்களின் வரவேற்பும்,ஆரவாரமும் மிகுந்த உற்சாகத்தையும் தருகிறது," என்றார் இயக்குநர் மதுமிதா.
Post a Comment