என்னது.. த்ரிஷாவும் நயன்தாராவும் வரலியா?- ஏமாந்து திரும்பிய மக்கள்

|

போரூருக்கு அருகில் உள்ளது கெருகம்பாக்கம் கிராமம். இப்போது கிராமம் என்று சொல்ல முடியாது (காரணம் நிலத்தின் விலை அங்கு கோடிகளில்). இங்குதான் ஜிவி பிரகாஷ் நடிக்கும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

படத்தின் தலைப்பைக் கேள்விப்பட்டதுமே, எங்கே த்ரிஷா, எங்கே நயன்தாரா.. ஒருவாட்டியாவது அவங்களைக் கண்ணுல காட்டுங்க என்ற கோரிக்கையோடு பெருசு சிறுசு என்ற பேதமில்லாமல் வந்துவிட்டார்களாம் அந்தப் பகுதி மக்கள்.

என்னது.. த்ரிஷாவும் நயன்தாராவும் வரலியா?- ஏமாந்து திரும்பிய மக்கள்

இது ச்சும்மா தலைப்புங்க.. அவங்க யாரும் இதுல நடிக்கல.. இந்தப் பொண்ணுதான் ஹீரோயின் என்று நடிகை ஆனந்தியைக் காட்டியிருக்கிறார்கள். அட நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி இருக்கே என்று முணுமுணுத்தபடி கலைந்திருக்கிறார்கள் த்ரிஷ்- நயன் ரசிகர்கள்!

சிஜே ஜெயகுமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் அப்பாவி இளைஞனாக வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். அவருக்கு ஜோடி ஆனந்தி. ஆதிக் இயக்கும் இந்தப் படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

 

Post a Comment