லிங்கா பட விவகாரத்தில் விநியோகஸ்தர்கள் நடந்து கொண்ட முறை மிகவும் தவறானது. அவர்களால்தான் அந்தப் படம் நஷ்டமடைந்தது. அதற்காக ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் ரஜினி சாரிடம் மன்னிப்புக் கோருகிறோம், என்றார் வேந்தர் மூவீஸ் சிஇஓ டி சிவா.
லிங்கா விவகாரம் குறித்து விளக்க நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் டி சிவா கூறியதாவது:
'லிங்கா படம் ரிலீசாகி நான்காவது நாளே திருச்சி பகுதி விநியோகஸ்தர் சிங்காரவேலன் படம் நஷ்டம்னு பேட்டி கொடுக்க ஆரம்பிச்சுட்டார், அதை பார்த்துட்டு தயாரிப்பாளர் வெங்கடேஷ் சார், என்னங்க இப்படியெல்லாம் பேசுறாங்க, நீங்க அதை கொஞ்சம் கவனிக்கக்கூடான்னு கேட்டார்.
நான் உடனே சிங்காரவேலனுக்கு போன் செஞ்சு, என்ன சிங்காரம்.. இப்படியெல்லாம் பேசுறீங்க. கொஞ்சம் அமைதியா இருங்க.. படம் ரிலீஸாகி 4 நாள்தான் ஆகுது. அதுக்குள்ள இப்படி பிரச்னையை கிளப்பினா எப்படின்னு கேட்டேன்.
இல்ல ஸார்.. ஏதோ ஒரு எமோசனல்ல அப்படி பேசிட்டேன். சாரி சார்னு சொன்னார்.
நான் உடனே அதை வெங்கடேஷ் சார்கிட்டே சொல்லி, இனி பேச மாட்டார்னு சொன்னேன்.
ஆனா அப்படி பேச ஆரம்பிச்சு அவர் தினமும் இதே பிரச்னையை கிளப்ப ஆரம்பிச்சாரு. மறுபடியும் சிங்காரவேலன்கிட்ட கேட்டுக்கிட்டேன்.. மதன் சார்.. ஊர்ல இல்லை. பத்தாம்தேதிதான் வர்றாரு. அவர் வந்தவுடனே நாம உட்கார்ந்து பேசி நம்ம பிரச்னையை தீர்த்துக்கலாம், கொஞ்சம் பொறுமையா இருங்கன்னு சொன்னேன்.
ஆனா அவர் என்னோட பேச்சை கேட்கவே இல்லை. தொடர்ந்து அவரோட பேட்டி பல பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வர ஆரம்பிச்ச உடனே அதுல சந்தோஷப்பட்டு தொடர்ந்து லிங்காவைப் பத்தி பேசிக்கிட்டே இருந்தாப்புல. நேத்து ராத்திரி கூட அவங்ககிட்ட பேசினேன். இன்னிக்கு உண்ணாவிரம் நடக்காது சார்ன்ற மாதிரியேதான் பேசினாங்க.
ஆனா உண்ணாவிரதம் நடந்துச்சு... சிங்கார வேலன் பின்னாடி சில விநியோகஸ்தர்கள் போறதக்கு காரணம், அவர் பின்னாடி போனா உடனே ஏதாவது பணம் கிடைச்சுடும்னு நினைச்சிட்டாங்க.. இதுதான் காரணம். ரஜினி சாரை பத்தி மோசமா என்கிட்ட பேசினார். அவருக்கெல்லாம் இந்தளவுக்கு பேசறதுக்கு எப்படி தைரியம் வந்ததுன்னே தெரியலை. ரஜினி சார் எப்பேர்ப்பட்ட மனிதர், தமிழ்நாட்டின் பொக்கிஷம் அவர். அவர் மாதிரி பெருந்தன்மையானவரை, நேர்மையானரை, மனிதாபிமானம் மிக்கவரை இந்த திரையுலகம் கண்டதில்லை.
4 வாரத்துக்கு அப்புறம் நஷ்டம்னு சொன்னா கூட பரவால்ல, 4வது நாளிலேயே படத்தை பத்தி தப்பா பேசறது மிகப் பெரிய தவறு. அதுதான் படத்துக்கு எதிராக அமைந்தது. இந்த விவகாரத்துல சிங்காரவேலன் இல்லீகலா அப்ரோச் பண்றாருன்னு மற்ற விநியோகஸ்தர்களும் புரிஞ்சுக்கிட்டு அவங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காம தள்ளி இருக்காங்க.. எந்த சங்கமும் அவர் பக்கம் இல்லை. இனி அவரால இந்த சினிமாவில பிஸினஸ் பண்ணவும் முடியாது. யாரும் அவருக்கு படமும் தரமாட்டார்கள்.
லிங்கா' படத்தால் எங்களுக்கு நஷ்டம்தான். அதுல எந்த சந்தேகமும் இல்லை. படத்தை வாங்கிய சில விநியோகஸ்தர்களின் நிலைமை எங்களுக்கும் புரியுது. அவங்களுக்கு நிச்சயமா நாங்க ஏதாவது செய்வோம். அப்படியொரு மனநிலைலதான் நாங்களும் இருந்தோம்.
தயாரிப்பாளர்கிட்ட பேசி அது பத்தி ஒரு முடிவுக்கு வந்து அவர்கிட்ட கான்பன்சேஷனா ஒரு தொகையைக் வாங்கி விநியோகஸ்தர்களுக்கு கொடுத்து அவங்க நஷ்டத்தை சரிகட்டத்தான் நாங்களும் நினைச்சிருக்கோம்.
இந்த நேரத்துல எங்களோட நல்லெண்ணத்தையே புரிஞ்சுக்காம இப்படி அவதூறா, ஆபாசமா, ரஜினி ஸாரை ரொம்ப கேவலமா சிங்காரவேலன் பேசிக்கிட்டேயிருக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு. அவரை யாரோ தப்பா வழிநடத்துறாங்கன்னு நிச்சயமா தெரியுது.
நடந்த சம்பவங்களுக்காக சிங்காரவேலன் உட்பட மற்ற விநியோகஸ்தர்கள் லிங்கா தயாரிப்பாளர் பற்றியும் ரஜினி சாரை பற்றியும் பேசினதுக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன், வெங்கடேஷ் சார் மன்னிச்சிடுங்க.. நீங்க தொடர்ந்து தமிழ்ல படம் பண்ணுங்க..,' என்றார்.
வேந்தர் மூவிசும் அவர்களிடம் படம் வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும் இடைப்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்னையை ஊதிப்பெரிதாக்கி, லிங்காவின் பிரம்மாண்ட வெற்றியை டேமேஜ் செய்த இவர்களை என்ன செய்யலாம்?
Post a Comment