சிம்பு - நயன்தாரா நடிக்க, பாண்டியராஜ் இயக்கும் இது நம்ம ஆளு படத்துக்கு ஆரம்பத்தில் ஏக பரபரப்பு கிளப்பப்பட்டது. ஆனால் அத்தனையும் புஸ்ஸாகிப் போனது... காரணம், படம் அடுத்த கட்டத்துக்குப் போகவே இல்லை.
படப்பிடிப்பும் நடக்காமல், ரிலீஸ் பற்றிய எந்த செய்திகளும் இல்லாமல் அமைதியாகிவிட்டது இது நம்ம ஆளு வட்டாரம். படப்பிடிப்புக்கு படு தாமதமாக வரும் சிம்புவுடன் இயக்குநர் மோதல் என்ற ஆரம்பத்தில் செய்திகள் வந்தன.,
விசாரித்ததில் படத்தின் தாமதத்துக்கு முக்கிய காரணமே சிம்பு தம்பி குறளரசன்தான் என்கிறார்கள்.
குறளரசன்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர். அவருக்கு அறிமுகப் படம்.
குறளரசனால்தான் படம் தாமதமாகிறது என்பதை வெளிப்படையாகவே பாண்டிராஜ் கூறியுள்ளார். ட்விட்டரில், 'பொங்கலன்று இது நம்ம ஆளு டீசர் வரும். ஆனால் இசை இல்லாமல்... என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?' என்று கிண்டலடித்துள்ளார். அதில் குறளரசன் மற்றும் சிம்புவை டேக் செய்துள்ளார்.
இந்தப் படம் கடந்த 2013 ஜனவரியில் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் ட்ரைலர் கூடத் தயாராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment