சினிமாலதான் நான் ஹோம்லி.. நிஜத்தில நான் வேற மாதிரி- லட்சுமி மேனன்

|

தென்னிந்திய சினிமாவின் அதிகம் விரும்பப்படும் நாயகியாக மாறிவிட்ட லட்சுமி மேனன், அவசரப்பட்டு படங்களை ஒப்புக் கொள்வதில்லை. தன் படிப்புக்கான நேரம் போக, மீதியிருக்கும் நேரத்தில்தான் படம் நடிக்கிறார்.

அதுமட்டுமல்ல, சினிமாவில் வருவது போன்ற அடக்க ஒடுக்கமான குடும்பப்பாங்கான பெண் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம் என்றும் அடிக்கடி சொல்லிக் கொள்கிறார்.

சினிமாலதான் நான் ஹோம்லி.. நிஜத்தில நான் வேற மாதிரி- லட்சுமி மேனன்

இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், " சினிமாவுல வர்ற மாதிரி ஹோம்லியான பொண்ணு இல்ல நான். நிஜத்துல என் கேரக்டரே வேற.

படத்துல வர்ற ஒரு கேரக்டர் ரோலை பார்த்துட்டு, இதுதான் அவங்க ஒரிஜினல் ரோல்னு தயவு செய்து முடிவு செய்யாதீங்க. நான் படத்துல வர்ற கேரக்டர் மாதிரி கிடையாது. டோட்டலா வேற மாதிரி. நிழலும், நிஜமும் ஒண்ணு கிடையாதுங்க.. அதே மாதிரி படத்தின் வேடத்துக்கு ஏத்த மாதிரி நடிக்க எனக்கு தயக்கமில்லை. பாவாடை தாவணிதான் என் பர்மன்ட் உடைன்னும் நினைச்சிக்காதீங்க,'' என்று கூறியுள்ளார்.

ஹலோ டைரக்டர்ஸ்.. காதுல விழுந்ததா!

 

Post a Comment