அல்டிமேட் ஸ்டார் அஜீத்துடன் மோதப் போகும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்..!

|

தல அஜீத் உடன் மோதப்போகிறார் நாட்டாமை சரத்குமார் என்ற தகவல்கள் தீயாக பரவி வருகின்றன. என்ன வென்று விசாரித்தால் சண்டமாருதம் பட ரிலீஸ் பற்றிய செய்தியாம்.

அஜீத்தின் 'என்னை அறிந்தால்' திரைப்படம் பொங்கல் தினத்தன்று ஷங்கரின் 'ஐ' படத்தோடு போட்டி போடும் என்று எதிர்பார்த்த நிலையில் ஜனவரி 29ஆம் தேதிக்கு திடீரென ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.

இந்நிலையில் ஜனவரி 29ஆம் தேதி அஜீத் படம் போட்டியின்றி சோலோவாக ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அஜீத்துடன் மோத தயாராகிவிட்டார் சரத்குமார்.

அல்டிமேட் ஸ்டார் அஜீத்துடன் மோதப் போகும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்..!  

சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'சண்டமாருதம்' திரைப்படம் என்னை அறிந்தால் பட ரிலீஸின் அடுத்த நாளான ஜனவரி 30ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

சரத்குமார் இரு வேடங்களிலும் மற்றும் ஓவியா, மீரா நந்தன், சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, டெல்லி கணேஷ், சிங்கம் புலி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ராதிகா மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வெங்கடேஷ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே வெங்கடேஷ் இயக்கத்தில் மகாபிரபு, ஏய், சாணக்யா ஆகிய படங்களில் நடித்துள்ளார் சரத்குமார். இது வெங்கடேஷ் இயக்கத்தில் சரத் நடிக்கும் நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment