இளவரசன்- திவ்யா காதல் கதை படமாகிறது?

|

வாச்சாத்தி என்ற கிராமத்தில் பொதுமக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை, வாச்சாத்தி என்ற பெயரிலேயே படமாக்கியவர் ஆர் ரமேஷ்.

அவர் அடுத்து சினிமாவாக்கப் போவது தர்மபுரி இளவரசன் - திவ்யா காதல் கதையை.

இந்தப் படத்துக்கு ‘இலக்கணம் இல்லா காதல்' என்று தலைப்பிட்டுள்ளார்.

இளவரசன்- திவ்யா காதல் கதை படமாகிறது?

இப்படக்கதையில் நாயகன் பெயர் இளவரசன், நாயகியின் பெயர் திவ்யா.

இதில் ஆர். ரமேஷ், கவிதா, பாரதி, ராதாரவி, நந்தினி, விஜயகுமார், கெளசல்யா, வி.சி.ஜெயமணி, தேவிகிருபா, போண்டா மணி, ஐஸ்வர்யா, கராத்தே ராஜா, ப்ரியா, பெஞ்சமின், ஜெகதீஸ், விஜய கணேஷ், பழனி, கிங்காங், விஜயகுமார். பி.எஸ். ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை வசனம் எழுதி இந்தப் படத்தை வி.சி.ஜெயமணி இயக்குகிறார். தீபக் - மணி ஒளிப்பதிவு செய்கிறார்கள். வில்லியம்ஸ் - நாகா பாடல்களுக்கு இசையமைக்க படத்தின் பின்னணி இசையை அம்சத்வனி அமைக்கிறார்.

‘வாச்சாத்தி' படம் போலவே இப்படமும் விமர்சகர்க்ளிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெறும் என ஆர்ரமேஷ் மற்றும் வி.சி.ஜெயமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

படத்தை கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி பகுதிகளில்தான் படமாக்குகிறார்கள்.

 

Post a Comment