அனைவரையும் அரவணைத்துச் செல்வேன் - தயாரிப்பாளர் சங்க புதிய தலைவர் தாணு

|

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலைப்புலி தாணு, சங்கத்தில் அனைவரையும் பேதமின்றி அரவணைத்துச் செல்வேன் என்று உறுதியளித்தார்.

சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் ‘கலைப்புலி' எஸ்.தாணு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 438 ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.

அனைவரையும் அரவணைத்துச் செல்வேன் - தயாரிப்பாளர் சங்க புதிய தலைவர் தாணு

2 துணைத்தலைவர்களுக்கான தேர்தலில் எஸ்.கதிரேசன் 484 ஓட்டுகளும், பி.எல்.தேனப்பன் 355 ஓட்டுகளும் பெற்று வெற்றி பெற்றார்கள்.

டி.ஜி.தியாகராஜன் 621 ஓட்டுகள் பெற்று பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2 செயலாளர்கள் பதவிக்கு டி.சிவா, ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் போட்டியின்றி ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள்.

புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி ‘கலைப்புலி' எஸ்.தாணு நிருபர்களிடம் பேசுகையில், "தேர்தல் முடிவுகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை நம்பி வாக்களித்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தோல்வியடைந்தவர்களையும் பேதமின்றி அரவணைத்து தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தை வெற்றிக்கரமாக நடத்திச் செல்வேன். அனைத்து தயாரிப்பாளர்களின் நலன் காக்க பாடுபடுவேன்," என்றார்.

 

Post a Comment