மாமா ஐ லவ் யூ…..

|

லவ்ன்ற வார்த்தையை கேட்டாலே எனக்கு கடுப்பாகுது... ஆனா நானே ஐ லவ் யூ சொல்ல வேண்டியிருக்கே.

இது பாமக தலைவர் ராமதாஸ் இல்லைன்னா அன்புமணி ராமதாஸ் சொன்ன வார்த்தையோ இல்லை. தென்றல் தொடரில் காதலுக்கு எதிராக கொடி பிடிக்கும் ஜாதி வெறி பிடித்த கவுன்சிலர் சொல்லும் வார்த்தை..

காதலர்களை பிரித்து வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்யும் கவுன்சிலர் கணேசபாண்டியனின் மகளே காதலிக்கிறாள். இந்த காதலை சேர்த்து வைக்க தமிழ், துளசி ஜோடி முயற்சி செய்கிறது.

மாமா ஐ லவ் யூ…..

இதற்காக கணேச பாண்டியனின் மனைவி, மகள், என அனைவரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு அவர்கள் அடிக்கும் கூத்துதான் சில எபிசோடுகளாக போய்க்கொண்டிருக்கிறது.

ஓட ஓட விரட்டுறோம்

உங்களை ஓட விட்ட ஜி.பியை ஓட ஓட விரட்டுறோம். ஜி.பி. மகளோட காதலை சேர்த்து வைக்கிறோம் என்று துளசி ஆவேசமாக கூற தமிழ் உற்சாகமடைகிறார்.

காதலிங்க ப்ளீஸ்

இதற்காக அவர்கள் செய்யும் முதல் காரியம் ஜி.பி எனப்படும் கணேச பாண்டியனின் மனைவியை கடத்துகின்றனர்.

ரவுடிகளின் மனைவிகள்

கணேசபாண்டியனின் அடியாட்களின் மனைவிகளை காதலிக்க சொல்கின்றனர். இதனால் அடியாள் வேலையை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு போவதாக சொல்கின்றனர் அடியாட்கள்.

மாமா ஐ லவ் யூ

அதை விட ஒரு ஜாலி என்னவெனில் கணேசபாண்டியனின் மனைவியை காதலிக்க சொல்வதுதான். திகட்ட திகட்ட காதலிங்க... காதல் போதை கணேச பாண்டியனின் தலைக்கு ஏறனும் என்று அட்வைஸ் சொல்லி அனுப்பி வைக்கிறது துளசி அன் கோ.

ஐயோ... கொல்றாளே

இதே சூட்டோடு வீட்டுக்கு வந்த ஜி.பியின் மனைவி ஒவ்வொரு முறையும் ஐ லவ் யூ சொல்லச் சொல்ல கணேச பாண்டியன் மெர்சலாவதுதான் சீரியலின் ஹிட்.

சிரிக்க வைக்கும் தென்றல்

எது எப்படியோ 9 மணியானால் அழ வைத்த தென்றல் சில எபிசோடுகளாய் சிரிக்க வைக்கிறது. அணையப்போகும் விளக்கும் பிரகாசமாய் எரியும் என்பது இதுதானோ. அதான் இன்னும் சில நாட்களில் சீரியல் முடியப்போகுதோ அதுவரைக்கும் சிரிச்சுக்கங்க என்கின்றனர்.

 

Post a Comment