இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்கும் படம் டூரிங் டாக்கீஸ். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த மாதம் 30-ம் தேதி படம் திரைக்கு வருகிறது.
படம் குறித்து இயக்குனர் எஸ். ஏ.சியுடன் பேசினோம்.
"சினிமாவுக்கு வந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்த சினிமாவில் என்னை ஞாபகம் செய்கிற மாதிரி எதையாவது விட்டு போக ஆசைப்ட்டேன். அதற்காக எடுக்கப்பட்ட படம்தான் டூரிங் டாக்கீஸ்.
இளையராஜாவும் நானும் பல படங்களில் பணியாற்றியிருந்தாலும் இந்த படத்திற்காக ரொம்பவும் மெனக்கெட்டிருக்கார். இந்த படம் ஒரே டிக்கெட்டில் இரண்டு கதைகள் இருக்குற மாதிரி பண்ணியிருக்கேன். முதல் பாதியில் எழுபத்தி ஐந்து வாலிபன் தன்னோட காதல் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துகிறான் எப்ன்பதை காட்டியிருக்கேன்.
இரண்டாம் பாதியில் ஒரு கிராமத்து பொண்ணு இந்த சமூகத்தில் உள்ள துஷ்டர்களால் எப்படி பாதிக்கப்படுகிறாள் என்பதை காட்டியிருக்கேன்.
முதல் பாதி கதையில் நானே நடிச்சிருக்கேன். நான் கதை சொல்லப் போகும்போது மூன்று பாட்டுதான் வைப்பதாக இருந்தது. படத்தில் ரொம்பவும் ஈடுபாடு வந்ததால் இளையராஜா ஏழு பாட்டு போட்டுக் கொடுத்திருக்கார். அவ்வளவும் சூப்பர் ஹிட் ரகம். ஜனவரி முப்பதாம் தேதி படம் வெளியாகிறது," என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
Post a Comment