சென்னை: இத்தனை ஆண்டுகளில் தான் சம்பாதித்த பெரிய சொத்தே ரசிகர்கள் தான் என்று விஜய் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் கத்தி. இந்த படம் மூலம் சமந்தா முதல்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். லைக்கா நிறுவனம் தயாரித்ததால் கத்தி படம் பல பிரச்சனைகளை சந்தித்து ஒருவழியாக ரிலீஸானது.
படம் ரூ.100 கோடி வசூல் செய்தது என்று கூறப்பட்டது. இந்நிலையில் கத்தி படம் வியாழக்கிழமையுடன் 100 நாட்களை தொட்டுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். ட்விட்டரிலும் இதை டிரெண்டாகவிட்டு அழகு பார்த்தனர்.
இந்நிலையில் இது குறித்து விஜய் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நீங்கள் என் மீது செலுத்திய அன்புக்கு நன்றி என்பது மிகவும் சிறிய வார்த்தை. இத்தனை ஆண்டுகளாக நான் சம்பாதித்த பெரிய சொத்தே நீங்கள் தான் என்று தெரிவித்துள்ளார்.
விஜய் சம்பாதித்த பெரிய சொத்தே அவரது ரசிகர்கள் தானாம்.
Post a Comment