விஷாலை வைத்து உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி படம் தர ஆசை! - சுந்தர் சி

|

நடிகர் விஷாலை வைத்து உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி ஒரு படத்தை உருவாக்க விரும்புகிறேன் என்று இயக்குநர் சுந்தர் சி கூறினார்.

விஷால் - சுந்தர் சி கூட்டணியில் உருவாகி பொங்கலுக்கு வெளியான ஆம்பள படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு கிரீன் பார்க் ஓட்டலில் நேற்று நடந்தது.

விஷாலை வைத்து உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி படம் தர ஆசை! - சுந்தர் சி

இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுந்தர் சி, "ஆம்பள படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மீண்டும் விஷாலை வைத்து படம் இயக்கவிருக்கிறேன்.

எனக்கு எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படம் மிகவும் பிடிக்கும். விஷாலை வைத்து உலகின் பல்வேறு நாடுகளில் உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி ஒரு படத்தை எடுக்க விரும்கிறேன்," என்றார்.

ஏழு அல்லது எட்டு நாடுகளில் இந்தப் படத்தை எடுக்கப் போகிறாராம் சுந்தர் சி. இந்த ஆண்டு இறுதியில் படத்தை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளார்களாம்.

 

Post a Comment