ஸ்ரீதேவியின் வளர்ப்பு மகளான கமல் மகள் அக்ஷரா

|

பாலிவுட் படம் ஒன்றில் ஸ்ரீதேவியின் வளர்ப்பு மகளாக கமல் மகள் அக்ஷராஹாசன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் கமல்-ஸ்ரீதேவி ஜோடி பிரபலம். இன்றைக்கு அவர்களின் வாரிசுகள் நடிக்க வந்துவிட்டனர். கமல் இன்னமும் ஹீரோவாக நடித்து வந்தாலும் திருமணம் குழந்தைகள் என்று செட்டில் ஆன ஸ்ரீதேவி மீண்டும் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.

‘இங்கிலீஷ் விங்கிலீஷ்' கொடுத்த வெற்றி உற்சாகத்தினால் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள ஸ்ரீதேவி, தற்போது விஜய்யின் புலி படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ரீதேவியின் வளர்ப்பு மகளான கமல் மகள் அக்ஷரா

இந்நிலையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தில் ஸ்ரீதேவி ஹீரோயினியாக நடிக்கவுள்ளார். வளர்ப்பு மகளுக்கும் தாய்க்கும் இடையே நடைபெறும் பாசப்போராட்டம்தான் கதையின் முக்கிய கரு.

இந்த படத்தில் தாயாக ஸ்ரீதேவியும், வளர்ப்பு மகளாக கமலின் இரண்டாவது மகள் அக்ஷராஹாசனும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டில் அமிதாப், தனுஷுடன் 'ஷமிதாப்' படத்தில் அறிமுகமான அக்ஷராவுக்கு இது இரண்டாவது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

Post a Comment