மீண்டும் கவுதம் மேனனுடன் கைகோர்க்கும் ஏ ஆர் ரஹ்மான்

|

கவுதம் மேனனும் ஏ ஆர் ரஹ்மானும் முதலில் இணைந்த படம் விண்ணைத் தாண்டி வருவாயா. பாடல்களும் படமும் செம ஹிட்.

அடுத்து அதே படத்தை இந்தியில் ரீமேக்கினார்கள். ஆனால் எதிர்ப்பார்த்த அளவு போகவில்லை.

அதன் பிறகு ரஹ்மானும் கவுதம் மேனனும் மீண்டும் சேரவே இல்லை.

மீண்டும் கவுதம் மேனனுடன் கைகோர்க்கும் ஏ ஆர் ரஹ்மான்

கவுதம் மேனன் இளையராஜாவுடன் இணைந்து நீதானே என் பொன் வசந்தம் படம் செய்தார். அடுத்து என்னை அறிந்தால் படத்துக்காக மீண்டும் தன் பழைய பார்ட்னர் ஹாரிஸ் ஜெயராஜிடம் போனார்.

இப்போது மீண்டும் ஏ ஆர் ரஹ்மானை நாடியுள்ளார். இது சிம்பு - பல்லவி சுபாஷ் நடிக்கும் புதிய படத்துக்காக. இந்தப் படத்தை கடந்த ஆண்டே தொடங்கிவிட்டார் கவுதம். ஆனால் என்னை அறிந்தால் இயக்க வேண்டி வந்ததால், அப்படியே நிறுத்திவிட்டார். அந்தப் படத்துக்காக போடப்பட்ட டைட்டிலில் இசை ஏ ஆர் ரஹ்மான் என்றுதான் வருகிறது.

நேற்று முன்தினம் தனது பிறந்த நாளைக் கொண்டாடிய ரஹ்மான், இணையதளத்தில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் இதனை உறுதிப்படுத்தினார்.

என்னை அறிந்தால் வெளியானதும், இந்த சிம்பு படம் தொடங்கிவிடும். இன்னும் ஒரு விண்ணைத் தாண்டி வருவாயாவாக இந்தப் படம் அமையட்டும்.

 

Post a Comment