நான்கு வருடங்களுக்குப் பிறகு சரத்குமார் தனி ஹீரோவாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு இரண்டு வேடங்கள். இப்படத்திற்கு சரத்குமார் கதை எழுத அதற்கு ராஜேஷ் குமார் திரைக்கதை அமைத்துள்ளார். இப்படத்தினை ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.
ஓவியா, மீரா நந்தன் என இரு ஹீரோயின்கள். இவர்களுடன் ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, சிங்கம் புலி, டெல்லி கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.
ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் தந்து எடுத்திருக்கும் இந்தப் படத்தை வரும் 20 ஆம் தேதி வெளியிடுகின்றனர். மேஜிக் பிரேம்ஸ் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர்.
சண்டமாருதம் என்றால் ஊழிப்பெருங்காற்று என்று அர்த்தமாம். அப்படி ஒரு திகில் கலந்த நகைச்சுவை படமாக சண்டமாருதம் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.
Post a Comment