மார்ச் 27-ல் சிம்புவின் 'வாலு' ரிலீஸ்... டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார் டைரக்டர் விஜய் சந்தர்!

|

சென்னை: சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள வாலு திரைப்படம் மார்ச் மாதம் 27ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அதன் இயக்குநர் விஜய் சந்தர் தெரிவித்துள்ளார்.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ், பிரம்மானந்தம், 'ஆடுகளம்' நரேன், மந்த்ரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இப்படத்தைத் தயாரித்துள்ளார். ஷக்தி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.

மார்ச் 27-ல் சிம்புவின் 'வாலு' ரிலீஸ்... டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார் டைரக்டர் விஜய் சந்தர்!

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இதோ, அதோ என வாலு பட ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. இறுதியாக சிம்பு பிறந்த தினமான இன்று அப்படம் ரிலீசாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், சொன்னபடி படம் ரிலீசாகவில்லை.

இந்நிலையில், மார்ச் 27-ல் 'வாலு' படம் ரிலீஸ் ஆகும் என்று விஜய் சந்தர் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், சிம்பு பிறந்தநாள் பரிசாக வாலு படத்தின் டீசர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மூன்று வருடங்களுக்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளிவரும் படம் என்பதால் 'வாலு' படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு படம்', வேட்டை மன்னன் ஆகிய படங்களும் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment