சென்னை: போகி என்ற புதிய படத்தில் | ஓவியா | பூனம் பாஜ்வா
'என்னை அறிந்தால்', 'பூலோகம்', 'அப்பா டக்கரு', 'லயன்', 'ரம்' என ஏற்கனவே த்ரிஷா கை நிறைய படங்களுடன் இருக்கிறார். இதில், என்னை அறிந்தால் படம் இவ்வாரம் ரிலீசாகிறது.
இதற்கிடையே, சமீபத்தில் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும், நடிகை த்ரிஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.
Happy 2 announce that I will be rejoining d cast n crew for my film now titled "BHOGI" wit Poonam n Oviya 🌟👊💃😇
— Trisha Krishnan (@trishtrashers) February 2, 2015 திருமணத்திற்குப் பிறகு த்ரிஷா நடிப்பதை நிறுத்தி விடுவார் என தகவல்கள் வெளியாயின. ஆனால், 'போகி' படத்தின் அறிவிப்பு த்ரிஷா மீண்டும் நடிப்பார் என்பதை உறுதியாக்கி இருக்கிறது.
'விரைவில் 'போகி' படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக' தனது டுவிட்டர் பக்கத்தில் த்ரிஷா தெரிவித்துள்ளார்.
Post a Comment