சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட யுவன் சங்கர் ராஜா - ஜெபருன்னிசா தம்பதிகளுக்கு தலா 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பரிசாக அளித்தார் இளையராஜா.
இளையராஜாவின் மகன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கும் ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் ஜபருன்னிசாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இது யுவனின் 3-வது திருமணம். இவர்களின் திருமணம் கீழக்கரை அருகே உள்ள கிராமத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தில் மணமகளின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். யுவனின் குடும்பத்தில் இருந்து தங்கை பவதாரணி, கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். ஆனால் அன்றைய தினம் இளையராஜா திருவண்ணாமலையில் இருந்ததால் திருமணத்துக்கு செல்லவில்லை.
புதுமண தம்பதிகள் சமீபத்தில் இளையராஜாவைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றனர். இவர்கள் இருவருக்கும் தலா 10 பவுனில் தங்கச் செயின் அணிவித்து வாழ்த்தினார் இளையராஜா.
Post a Comment