ஏப்ரல் மாதம் மணிரத்னத்தின் ஓகே கண்மணி!

|

‘கடல்' படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் படம் ‘ஓ.கே.கண்மணி' படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஓகே கண்மணி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகின. இப்படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான்-நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஏப்ரல் மாதம் மணிரத்னத்தின் ஓகே கண்மணி!

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் மத்தியில் படத்தின் இசையை வெளியிடவிருக்கிறார்களாம்.

மௌன ராகம், அலைபாயுதே பாணியிலான காதல் கதையாக இந்த ஓகே கண்மணி உருவாகி வருகிறது.

 

Post a Comment