டெல்லியில் நடந்த ஷமிதாப் அறிமுக விழாவில் பங்கேற்ற அமிதாப் பச்சனையும் தனுஷையும் பார்க்க ஏராளமானோர் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பால்கி இயக்கத்தில் உருவாகியுள்ள ஷமிதாப் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இந்தப் படத்தின் விளம்பர வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. நாட்டின் முக்கிய நகரங்களுக்கு அமிதாப்பும் தனுஷும் நேரில் சென்று படத்தை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
‘ஷமிதாப்' படத்தின் அறிமுக விழா புதுடெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்களைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அப்பகுதியில் திரண்டனர்.
அறிமுக விழா முடிந்து அரங்கில் இருந்து வெளியேவந்த அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் ஆகியோரை அருகில் சென்று காணவும், அவர்களுடன் ‘செல்பி' எடுத்துக் கொள்ளவும் ரசிகர்கள் முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
ரசிகர்கள் சாலையிலேயே குவிந்துவிட்டதால், பரபரப்பான கன்னாட் பிளேஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Post a Comment