உத்தம வில்லன், கொம்பன், நண்பேன்டா... ஒரு பெரும் மோதல் காத்திருக்கிறது!

|

கோடை விடுமுறையின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கப் போகிறது தமிழ் சினிமாவில்.

ஏப்ரல் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான 3-ம் தேதி புனித வெள்ளி என்பதால், அதற்கு ஒரு நாள் முன்பாக ஏப்ரல் 2-ம் தேதி புதிய படங்களை வெளியிடுகின்றனர்.

உத்தம வில்லன், கொம்பன், நண்பேன்டா...  ஒரு பெரும் மோதல் காத்திருக்கிறது!

அன்றைக்கு மூன்று முக்கியமான படங்கள் வெளியாகவிருக்கின்றன.

கமல் ஹாஸன் நடித்த உத்தம வில்லன், உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேன்டா மற்றும் கார்த்தியின் கொம்பன் ஆகிய படங்கள் அன்று வெளியாகவிருக்கின்றன.

உத்தம வில்லனை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது. வெளியீட்டுத் தேதியையும் அறிவித்துவிட்டது.

நண்பேன்டா படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் வெளியிடுகிறது. அந்த நிறுவனமும் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது.

கொம்பன் படத்தை குட்டிப்புலி முத்தையா இயக்கியுள்ளார். படத்தின் இசை வரும் மார்ச் 5-ம் தேதி வெளியாகிறது. படத்தை ஏப்ரல் 2-ம் தேதி வெளியிடப் போவதாக ஸ்டுடியோ கிரீன் அறிவித்துள்ளது.

 

Post a Comment