ஹைதராபாத்: நடிகை சார்மியின் இடுப்பை பிடித்து சில்மிஷம் செய்த வாலிபருக்கு தர்ம அடி விழுந்துள்ளது.
சிசிஎல் எனப்படும் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. நடிகர் ஜீவா தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி, தெலுங்கு வாரியர்ஸ் அணியிடம் தோற்றது.
இதையடுத்து, நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை சார்மி சென்றிருந்தார். அங்கு 18 வயதுடைய ரசிகர் ஒருவர் சார்மியை அணுகி ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சார்மியும் சம்மதிக்கவே, பக்கத்தில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த வாலிபர். அப்போது திடீரென சார்மியின் இடுப்பை வளைத்து பிடித்துள்ளார். போஸ் கொடுக்கவே அப்படி செய்கிறார் என்று சார்மியும் சும்மா இருந்துள்ளார். ஆனால் இடுப்பை கிள்ளி, தடவி சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார் அந்த வாலிபர்.
இதனால் கடும் கோபம் அடைந்த சார்மி, அலறியடித்தபடி அந்த ரசிகரை பிடித்து தள்ளியுள்ளார். சார்மியின் அலறலை கேட்டு விருந்தில் கலந்து கொண்ட சிலர், அந்த ரசிகருக்கு தர்மஅடி கொடுத்து விரட்டி அடித்தனர்.
இது குறித்து சார்மி கூறுகையில், "எனது பாதுகாவலர்கள் அந்த நபரை அடிக்கும்போதும், அவர் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார். அவர் சைக்கோவாக இருக்கலாமோ என்று நினைத்தேன். இனி என் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவேன். அறிமுகம் இல்லாதவர்களை பக்கத்தில் நெருங்க விட மாட்டேன்" என்றார்.
Post a Comment