கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய படமான அனேகனுக்கு முழு கேளிக்கை வரிவிலக்கு அளித்துள்ளது தமிழக அரசு.
அனேகன் படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு கேளிக்கை வரிவிலக்குக்கு பரிந்துரைக்கும் குழு முன்பு படத்தை திரையிட்டுக் காட்டினர் தயாரிப்பாளர்கள்.
அக்குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து, படத்து முழு வரிவிலக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது அனேகன் குழுவுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
காரணம் சமீபத்தில் வந்த பெரிய படங்களான ஐ, என்னை அறிந்தால் போன்றவை யு ஏ சான்று பெற்றதால், வரி விலக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஜிஎஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 13-ம் தேதி 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது.
Post a Comment