'ரஜினி முருகன்' தியேட்டர் வெளியீட்டு உரிமையை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்

|

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராம், நடித்த சிவகார்த்திகேயன் - சூரி கூட்டு சேர்ந்திருக்கும் இரண்டாவது படமான ரஜினி முருகன் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கியுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். டி.இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

'ரஜினி முருகன்' தியேட்டர் வெளியீட்டு உரிமையை வாங்கியது ஸ்டுடியோ கிரீன்

இந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள 'என்னம்மா.. இப்படி பண்றீங்களேம்மா..' பாடல் பற்றித்தான் கோலிவுட் முழுக்க பேச்சாக உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. படத்தின் வெளியீட்டு உரிமையை ஈராஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. வருகிற ஏப்ரலில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்குகளின் உரிமையை மட்டும் ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த நிறுவனமே இப்படத்தை விநியோகம் செய்யவுள்ளது.

 

Post a Comment