கரகரவென்ற தனது குரலாலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இந்தக் காமெடி நடிகர். ஆனால் சற்று சிக்கலானவர் என்கிறார்கள். இவருடன் நட்பில் விழுந்த பின்னரே விரல் நடிகரின் படங்கள் அனைத்தும் பிரச்சினையில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
காரணம் கரகர காமெடியுடன் சேர்ந்து, விரல் நடிகர் பல இடங்களுக்கும் சுற்றியதாகவும், இதனால் படவேலைகள் பாதிக்கப்பட்டதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கரகர நடிகர் தற்போது வெற்றி நடிகரின் படத்தில் இணைந்து நடித்து வருகிறார். படப்பிடிப்பிற்கு வெளியேயும் வெற்றி நடிகரோடு தோளில் கை போட்டு சுற்றி வருகிறாராம் காமெடி.
இதனால், நடிகருக்கு அவரது நல விரும்பிகள் அறிவுரை மழை பொழிந்து வருகிறார்களாம். வளர்ந்து வரும் இந்த நடிகர் மீது ஏற்கனவே பல காதல் கிசுகிசுக்கள் உள்ளது. உடன் நடிக்கும் நடிகைகளுடன் இணைத்து இவரது பெயர் கிசுகிசுக்கப்படும்.
இந்நிலையில், இந்த கூடாநட்பு நடிகரின் எதிர்காலத்தையே அழித்து விடும் என நலவிரும்பிகள் கவலைப் படுகிறார்களாம். எனவே, காமெடியுடனான நட்பை குறைத்துக் கொள்ளும் படி அவர்கள் அறிவுறுத்தியுள்ளனராம்.
Post a Comment