அனேகன் 'வெற்றி'யைக் கொண்டாடிய தனுஷ், சிம்பு, கேவி ஆனந்த்

|

நேற்றுதான் தனுஷ் நடித்த அனேகன் படம் வெளியானது. வெளியான 24 மணி நேரத்தில் படம் தாறுமாறான வெற்றி என்று அறிவித்துள்ள தனுஷ், அதற்காக தனது நெருங்கிய நண்பர்களை அழைத்து நேற்று இரவே வெற்றி விருந்து அளித்துவிட்டார்.

கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் 700 க்கும் அதிகமான அரங்குகளில் நேற்று வெளியானது.

படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வர ஆரம்பித்த நிலையில், இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றியைக் கொண்டாட நேற்று இரவு வெற்றி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் தனுஷ். இதில் சிம்பு, இயக்குநர் கேவி ஆனந்த் மற்றும் தனுஷின் நண்பர்கள் பங்கேற்று கொண்டாடினர்.

 

Post a Comment