மாயாஜாலில் பரபர டிக்கெட் விற்பனை.. என்னை அறிந்தால் காட்சிகள் அதிகரிப்பு

|

அஜீத்தின் என்னை அறிந்தால் படத்துக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி பரபரப்பாக விற்பனையாகி வருகிறது. சில அரங்குகளில் முதல் 5 நாட்களுக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாகவே அஜீத் படங்களுக்கு முதல் வார வசூல் அபாரமாக இருக்கும். இந்த முறை என்னை அறிந்தால் படத்துக்கு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

மாயாஜாலில் பரபர டிக்கெட் விற்பனை.. என்னை அறிந்தால் காட்சிகள் அதிகரிப்பு

நாளை மறுநாள் வெளியாகும் இந்தப் படத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்பே சில அரங்குகளில் முன்பதிவு தொடங்கியது. டிக்கெட்டுகள் பரபரவென விற்றுத் தீர்ந்துவிட்டன. முக்கியமான மால்கள், அரங்குகளில் இன்றுதான் முன்பதிவு தொடங்குகிறது.

மாயாஜாலில் இந்தப் படத்தை தினசரி 63 காட்சிகள் திரையிடுகிறார்கள். இந்தக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருவதால், முதல் மூன்று தினங்களுக்கு மேலும் காட்சிகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

 

Post a Comment