வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்க: அஜீத் ரசிகர்கள் போராட்டம்

|

சென்னை: அஜீத்துக்கு கொலை மிரட்டலும், என்னை அறிந்தால் படம் வெளியாக உள்ள தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டலும் விடுத்தவர்களை கைது செய்யக் கோரி அஜீத் ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு மர்ம ஆசாமிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். மேலும் அஜீத்துக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் அஜீத் ரசிகர்கள் தங்கள் தல படத்துடன் கூடிய பேனர்கள், போஸ்டர்களை ஆங்காங்கே வைத்து அசத்தி வருகிறார்கள். இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்க என்று கூறி சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்க: அஜீத் ரசிகர்கள் போராட்டம்

அந்த போஸ்டரில் கூறியிருப்பதாவது,

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த(கோழைகளை) கைது செய்!

சாவுக்கு பயந்தவனுக்கு தினம் தினம் சாவு
எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒரு தடவை தான் சாவு
எங்கள் தல யை தொடணும்னா....
எங்களை தாண்டி தொட்டுப் பாருங்கடா பார்ப்போம்...

இவ்வாறு அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர புதுவை உள்ளிட்ட சில இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யக் கோரி அஜீத் ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

 

Post a Comment