முன்னணி இயக்குனர்கள் தங்களது உதவி இயக்குனர்களின் படங்களை தயாரித்து உதவி புரியும் வழக்கம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வருகிறது.
இயக்குனர் ஷங்கர் தனது சிஷ்யர் காரத்திக் ஜி க்ரிஷ் இயக்கிய கப்பல் படத்தை வெளியிட்டார். படத்தின் வெற்றிக்கு அது பக்க பலமாய் அமைந்தது.
இயக்குநர் ஷங்கரை தொடர்ந்து பிசாசு படத்தின் வெற்றி தந்த தெம்பில் இருக்கும் இயக்குநர் மிஷ்கின் தனது நெடு நாள் சிஷ்யர் வடிவேல் இயக்கும் ‘கள்ளப்படம்' என்ற படத்தை 'லோன் வுல்ப் புரொடக்ஷன்ஸ்' சார்பில் வெளியிடுகிறார்.
நல்ல தரமான படைப்புகளுக்கு துணை நிற்க ஆயத்தமாகி வரும் 'லோன் வுல்ப் புரொடக்ஷன்ஸின் முதல் வெளியீடாக வருகிறது ‘கள்ளப்படம்' .
"நான் இந்தப் படத்தை பார்த்தேன். என்னைப் பொறுத்த வரையில் இப்படம் தமிழ் சினிமாவின் தரமான படங்களின் பட்டியலில் இடம்பெறும். வடிவேல் எனது சிஷ்யன் என்று கூறி பெருமிதம் கொள்ளும் அதேவேளையில், இப்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். லக்ஷ்மி ப்ரியா, இசையமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், படத்தொகுப்பாளர் காஜின், வடிவேல் ஆகியோரது இந்த கூட்டணி நம்பிக்கையின் அச்சாணியாய் விளங்குகிறது. சினிமாவை ரசிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்படம் ஒரு விருந்தாய் அமையும்," என்கிறார் இயக்குநர் மிஷ்கின்.
Post a Comment