சென்னை: இனி விழாக்களில் பேசும்போது எதையாவது உளறி பிரச்சனையில் சிக்க வேண்டாம் என்று பவர்ஸ்டார் முடிவு செய்துள்ளாராம்.
பவர்ஸ்டார் சீனிவாசன் படங்களை விட அதிகமாக படம் தொடர்பான விழாக்களில் தான் கலந்து கொள்கிறார். மேடையில் பேசுகையில் காமடெியாக பேசி கைத்தட்டல் வாங்குகிறேன் என்ற பெயரில் எதையாவது உளறிவிடுகிறார். முக்கியமாக மேடைதோறும் தயாரிப்பாளர்களை கண்டமேனிக்கு தாக்கிப் பேசி வருகிறார். இதனால் தயாரிப்பாளர்கள் பவர் மீது கொலவெறியில் உள்ளனர்.
அண்மையில் கலந்து கொண்ட விழா மேடையில் தயாரிப்பாளர்களை தாக்கிப் பேசினார் பவர். அவரை அடுத்து பேசியவர்கள் பவரை காய்ச்சி எடுத்துவிட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் ஆடிப்போய்விட்டாராம்.
இனியும் மேடைகளில் உளறிக் கொட்டி யாரிடமும் வசை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளாராம் பவர். பவருக்கு யாரும் முக்கியமான கதாபாத்திரங்கள் கொடுக்கக் கூடாது என்று தயாரிப்பாளர்கள் ஏற்கனவே இயக்குனர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனாலும் தான் அடக்கி வாசிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார் பவர்.
Post a Comment