காதலர் தினத்தை கொண்டாடுவது தவறல்ல. காதலையும் காதலர் தினத்தையும் கொண்டாடுங்க, என்று கூறியுள்ளார் நடிகை தமன்னா.
இன்று காதலர் தினம் என்பதால், அதையொட்டி நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில், "காதல் என்பது சொல்லில் வர்ணிக்க முடியாத ஒரு அற்புதம். நமக்காக, நம்மை நேசிக்கிற ஒருவர் இருக்கிறார் என்று நினைக்கும் போதே பெருமிதமாக இருக்கும்.
அழகான காதல் படங்களைப் பார்க்கிற போது நாமும் அதில் வாழ்வது போன்ற சந்தோஷம் கிடைக்கும். அதைவிட சுகமான அனுபவம் வேறில்லை.
காதல் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம். நான் காதல் சம்பந்தப்பட்ட படங்களை அதிகம் பார்ப்பேன். காதல் பாடல்களைத்தான் அதிகம் கேட்பேன். காதலர் தினத்தை காதல் ஜோடிகள் கொண்டாடுகிறார்கள். அது தவறல்ல. காதலையும் காதலர் தினத்தையும் கொண்டாடுங்கள்," என்றார்.
Post a Comment