பாலாபிஷேகம், பூஜை... ரசிகர்களின் என்னை அறிந்தால் ஃபீவர் ஆரம்பம்!

|

அஜீத் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர் நடித்த என்னை அறிந்தால் படத்தை வரவேற்கத் தயாராகிவிட்டார்கள்.

பிப்ரவரி 5-ம் தேதி வெளியாகும் அவரது படத்துக்கு இப்போதிலிருந்தே பாலாபிஷேகம், பூஜை செய்து ஆரவாரத்துடன் கொண்டாடுவர்.

பாலாபிஷேகம், பூஜை... ரசிகர்களின் என்னை அறிந்தால் ஃபீவர் ஆரம்பம்!

பொதுவாக இந்த மாதிரி கொண்டாட்டங்கள் பெரும்பாலும் படம் வெளியாகும் நாளன்றுதான் நடக்கும்.

ஆனால், அஜித்தின் ‘என்னை அறிந்தால்' படம் வெளியாவதற்கு முன்பே அஜித் ரசிர்கள் அப்படத்தின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடியுள்ளனர்.

நேற்று இரவு சென்னை காசி திரையரங்கில் அமைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய ‘என்னை அறிந்தால்' கட்-அவுட்டுக்கு அஜித் ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

மதுரையில் உள்ள அஜீத் ரசிகர்களும் இதே போல பூஜை, பாலாபிஷேகம் என அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.

 

Post a Comment