அப்பா மயில்சாமி காமெடிதான்.. ஆனா மகன் ஹீரோவாயிட்டாரே!

|

சென்னை: காமெடி மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் திறமையான நடிகர் என்ற பெயரைப் பெற்றவர் நடிகர் மயில்சாமி. தற்போது இவரது மகன் அன்பு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.

இன்னும் பெயரிடப்படாத அப்படத்தை பட்டியல் சேகர் தயாரிக்கிறார். இவர் நடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குனர் விஷ்ணுவர்தனின் தந்தையாவார்.

அப்பா மயில்சாமி காமெடிதான்.. ஆனா மகன் ஹீரோவாயிட்டாரே!

இப்படம் குறித்து பட்டியல் சேகர் கூறியதாவது :-

இப்படம் முழுக்க முழுக்க காமெடி பொழுது போக்கு படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தை ஜான்சன் என்னும் அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளார்.

வேலையில்லாமல் ஜாலியாகவும் அதிர்ஷ்டசாலியாகவும் ஊர் சுற்றும் வாலிபன் பிராமணப் பெண் மீது காதல் வயப்படுகிறான் என்பதை மையக்கருவாக வைத்து சுவாரஸ்யமாக எடுக்கவுள்ளோம். இதில் அன்பு கதாநாயகனாவும், பாப்ரி கோஷ் கதாநாயகியாகவும் நடிக்க இருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் கிரண், ஜெயஸ்ரீ, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 16ம் தேதி தொடங்கவுள்ளது. சென்னையை சுற்றியே இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த உள்ளோம் என்றார்.

இந்தப் படத்துக்காக அன்புவின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளாராம் பட்டியல் சேகர். நல்ல பெயராக பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.

 

Post a Comment