படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை.: மருத்துவமனையில் அனுமதி

|

மும்பை: படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பாலிவுட் நடிகை சோனம் கபூர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாலிவுட் நடிகை சோனம் கபூர் பிரேம் ரத்தன் தான் பாயோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் படப்பிடிப்பில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை.: மருத்துவமனையில் அனுமதி

சோனம் அண்மையில் துபாய்க்கு சென்றிருந்தார். அங்கிருந்து மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் தனக்கு மிகவும் களைப்பாக உள்ளதாக தெரிவித்தார். விடாது வேலை செய்ததால் சோனம் கபூருக்கு அலுப்பு மற்றும் காய்ச்சல் இருந்தது. இருப்பினும் அவர் ஓய்வு எடுக்காமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் மயங்கி விழுந்தார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து சோனம் ட்விட்டரில் தெரிவித்து தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதை வெறுக்கிறேன்... ஊவி என்று தெரிவித்துள்ளார்.

 

Post a Comment