ஆமீர் கான் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற பீகே படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் ஹாஸன் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஆமீர் கான் - அனுஷ்கா சர்மா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பீகே. ரூ 600 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் இந்தியிலேயே வெளியாகி, இன்னமும் சில இடங்களில் படம் ஓடிக் கொண்டுள்ளது.
இந்தப் படத்தின் தமிழ் - தெலுங்கு ரீமேக் உரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் வாங்கியுள்ளது.
தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலுமே கமல் ஹாஸனை நாயகனாக வைத்து படத்தை உருவாக்க உள்ளனர்.
இயக்குநர், ஹீரோயின் என முக்கிய விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை. ஆனால் ஹீரோ விஷயத்தில் கமல் நடித்தால்தான் சரியாக இருக்கும் என்பதால் அவருடன் பேசி வருகிறார்கள். கமலும் இந்தப் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
Post a Comment