எம்ஜிஆரின் பாதுகாவலர், பழம்பெரும் ஸ்டன்ட் மாஸ்டர் என் சங்கர் மரணம்

|

பிரபல சினிமா ஸ்டன்ட் மாஸ்டரும் நடிகருமான என்.சங்கர் சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.

500க்கும் மேற்பட்ட படங்களில் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றியவர் சங்கர்.

எம்ஜிஆரின் பாதுகாவலர், பழம்பெரும் ஸ்டன்ட் மாஸ்டர் என் சங்கர் மரணம்

'இதயக்கனி' உள்ளிட்ட எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு இவர்தான் ஸ்டன்ட் மாஸ்டர். 'குடியிருந்த கோவில்', 'முகராசி' உள்ளிட்ட படங்களில் எம்ஜிஆருடன் நடித்தும் இருக்கிறார்.

எம்ஜிஆரின் பாதுகாவலர்களில் ஒருவராகத் திகழ்ந்த சங்கர், தென்னிந்திய திரைப்பட சண்டைப்பயிற்சி இயக்குநர் சங்கத்தின் தலைவராக ஐந்து முறை பதவி வகித்தவர். இவர் 'முகராசி' படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிலம்பம் கற்றுத்தந்தவர்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று பகல் 11 மணிக்கு மரணம் அடைந்தார்.

கோடம்பாக்கம் டைரக்டர்ஸ் காலனியில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை இறுதிச் சடங்கு நடக்கிறது.

 

Post a Comment