அதிக அரங்குகளில் வெளியாகும் முதல் சரத்குமார் படம் என்ற பெருமையுடன் வெளியாகிறது
வில்லனாக அறிமுகமாகி, ஹீரோவாக வெற்றிபெற்று, பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்த சரத்குமார், மீண்டும் ஹீரோவாக.. அதுவும் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் இந்த சண்டமாருதம். ஒன்றில் வில்லன் வேடம் ஏற்று நடித்துள்ளார்.
ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார்.
சரத்குமாரின் திரை வாழ்க்கையில் முதல் முறையாக அதிக அரங்குகளில் வெளியாகும் படம் இந்த சண்டமாருதம்தான்.
தமிழகத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்தப் படம் வெளியாவதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவித்திருந்தனர். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 40 அரங்குகள் வரை இந்தப் படம் வெளியாகிறது.
மகாராஷ்ட்ராவில் மும்பை, புனே போன்ற நகரங்களில் நூறு அரங்குகள் வரை இந்தப் படம் வெளியாகிறது.
Post a Comment