என்னை அறிந்தால்... கடல் தாண்டி இலங்கையிலும் கொண்டாடித் தீர்க்கும் அஜீத் ரசிகர்கள்!

|

கொழும்பு: அஜீத்தின் என்னை அறிந்தால் படத்திற்கு தமிழகத்தைப் போலவே இலங்கையிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

கௌதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் இன்று ரிலீசாகியுள்ளது. இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அனுஷ்கா நடித்துள்ளனர்.

என்னை அறிந்தால்... கடல் தாண்டி இலங்கையிலும் கொண்டாடித் தீர்க்கும் அஜீத் ரசிகர்கள்!

தமிழகத்தில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ, அதே அளவிற்கு இலங்கையிலும் இப்படத்திற்கு பலத்த வரவேற்பு இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இப்படத்தின் மிகப்பெரிய பலம் இசை மற்றும் ஒளிப்பதிவு தான் என்றும், ஹாலிவுட் படங்களுக்கு நிகராக வந்துள்ளதாகவும் இலங்கை ஊடகங்கள் பாராட்டியுள்ளன. அஜித் இந்தப் படத்தில் மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளதாகவும், அருண் விஜய் நடிப்பில் மிரட்டியுள்ளதாகவும் விமர்சனத்தில் அவை குறிப்பிட்டுள்ளன.

இப்படத்தில் தனக்குக் கொடுத்துள்ள கேரக்டர் குறித்து அருண் விஜய்யே, அஜீத் மற்றும் கெளதம் மேனனை பாராட்டிக் குவித்துக் கொண்டிருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.

இலங்கையில் இப்படம் 20க்கு மேற்பட்ட திரையரங்குகளில் ரிலிஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment