ஷமிதாப்... வேலையைக் காட்டிய வட இந்திய மீடியா

|

தமிழர்கள், தமிழர் வளர்ச்சி, தமிழருக்கான முக்கியத்துவம் எதற்குமே பெரிய இடம் கொடுக்கக் கூடாது என அரசியல்வாதிகள் நினைக்கிறார்களோ இல்லையோ... வட இந்திய மீடியாக்கள் அதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

தமிழர்கள் வளர்ச்சியை, சாதனைகளை, வரலாற்றுப் பெருமைகளை அவர்கள் ஒரு பொருட்டாகக் கூட கருதுவதில்லை. அவர்களின் பரபரப்புக்கு ஏதாவது உதவும் என்றால் மட்டுமே, தமிழர் விஷயத்தை கையிலெடுப்பார்கள்.

ஷமிதாப்... வேலையைக் காட்டிய வட இந்திய மீடியா

சினிமாவைப் பொருத்தவரை, தமிழ் கதாநாயகிகளை மட்டும் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கும் பாலிவுட் மீடியா, தமிழ் நடிகர் அல்லது கலைஞர் யாராவது பெரிய ரேஞ்சுக்கு வருவார்கள் என்று தெரிந்தால் ஆரம்பத்திலேயே அவர்களுக்கான முக்கியத்துவத்தை ஒழித்துக் கட்டுவதில் குறியாக நிற்கும்.

ஷமிதாப் படத்தை வட இந்திய மீடியா கடித்துக் குதறிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது இது மீண்டும் உறதியானது.

இந்தப் படத்தைப் பார்த்த தென்னிந்திய ஊடகங்கள், விமர்சகர்கள், திரையுலகினர் அனைவரும் பிரமித்து கொண்டாடுகிறார்கள்.

ஆனால் வட இந்திய ஊடகங்கள் அத்தனையும் சொல்லி வைத்தமாதிரி படத்தை மட்டம் தட்டியுள்ளன. இவை அனைத்தும் அமிதாப்புக்காக மட்டும் படத்தைப் பார்க்கலாம் என எழுதியுள்ளன.

காரணம் அமிதாப் தவிர பிற முக்கிய கலைஞர்கள் அனைவருமே தமிழர்கள்.

இயக்குநர் பால்கி, ஹீரோ தனுஷ், நாயகி அக்ஷரா, இசையமைப்பாளர் இளையராஜா, ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் என முக்கிய கலைஞர்கள் அனைவருமே தமிழர்கள்.

பல பத்திரிகைகள் மற்றும் ஆன்லைன் மீடியாக்கள் தனுஷையோ, இளையராஜாவையோ பற்றி குறிப்பிடாமலே விமர்சனம் எழுதியுள்ளனர். சில பத்திரிகைகள் இளையராஜா பெயரைக் கூட குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

+ comments + 1 comments

Anonymous
11 February 2015 at 13:21

There is no truth in this article..Many North India or Bollywood based articles have appreciated Dhanushs acting too.
.Infact some articles have even praised Dhanush more than Bachchan ji.
.Coming to.... not mentioning Music director the super talented Ilyaraja ji generally North Indian or Bollywood media does not give separate importance to music directors and they dont generally mention any Music director separately !!!!!!!.Ofcourse it would be nice if all articles have a word of praise or crticism regarding Music director Cinematagrapher etc.,

Post a Comment