'தல படத்தில் தலைவர் சீன்'... தியேட்டரே அதிருது!

|

அஜீத்தின் ஆரம்ப காலப் படங்களில் ஒரு காட்சியிலாவது ரஜினியின் படம் அல்லது ரஜினி படத்திலிருந்து ஒரு காட்சி இடம்பெறுவது வழக்கம்.

வான்மதி என்ற படத்தில் அஜீத் எப்படிப்பட்ட ரஜினி ரசிகன் என்பதைக் காட்ட ஒரு காட்சி வைத்திருப்பார்கள்.

அதில் அஜீத்தும் அவர் நண்பர்களும் ஒட்டும் ரஜினியின் போஸ்டரை ஒருவர் கிழித்துவிட, 'ஏன்ணே எங்க தலைவர் போஸ்டரை கிழிக்கிறீங்க?' என்று கேட்பார் அஜீத்.

'தல படத்தில் தலைவர் சீன்'...  தியேட்டரே அதிருது!

உடனே கிழித்தவர்கள், 'இவரெல்லாம் ஒரு தலைவரா.. தலைவரா வர இவருக்கு என்ன தகுதியிருக்கு?' என்பார்கள்.

அதற்கு பதிலளிக்கும் அஜீத், 'இதே இடத்துல உங்க தலைவர் போஸ்டர் இருந்து, நாங்க கிழிச்சிருந்தா என்ன பண்ணிருப்பீங்க?' என்பார்

'வெட்டுக்குத்து விழுந்திருக்கும்... ரத்த ஆறே ஓடியிருக்கும்' என்பார்கள் போஸ்டர் கிழித்தவர்கள்.

உடனே அஜீத், 'ஆனா நாங்க அப்படியெல்லாம் பண்ணாம, அமைதியா நின்னு பேசிக்கிட்டிருக்கோம். தொண்டனுக்கு வன்முறை கூடாதுன்னு அகிம்சையையும் சத்தியத்தையும் சொல்லிக்கொடுத்த தலைவர்யா அவரு. தலைவராக இதைவிட வேற என்ன தகுதி வேணும்?' என்பார்.

உடனே.. 'மன்னிச்சிக்க தலைவா... குடுங்கப்பா நாலு போஸ்டர்.. பண்ண பாவத்துக்கு நாங்களே ஓட்டிட்டுப் போறோம்...' என்று கிளம்பும் போஸ்டர் கிழித்த கோஷ்டி.

இதுபோல இன்னும் சில அஜீத் படங்களிலும் ரஜினியின் போஸ்டர் அல்லது காட்சியைக் காட்டுவார்கள்.

என்னை அறிந்தால் படத்திலும் அப்படி ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அதில் மூன்று முகம் படத்தில் ரஜினியின் புகழ்பெற்ற பாத்திரமான அலெக்ஸ் பாண்டியன் போஸ்டர் இடம்பெறுகிறது.

அந்தக் காட்சி வந்ததும் ரசிகர்கள் செய்யும் ஆர்ப்பரிப்பில் தியேட்டரே அதிர்கிறது.

'தல படத்தில் தலைவர் சீன் பார்க்கவே பரவசமா இருக்கு' என ரசிகர்கள் தெரிவித்தனர்.

 

Post a Comment